இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. […]
Why this கொலைவெறி ?
அழித்தல் என்பது எளிது கடினமாம் ஆக்கல் எனும் ஆற்றல் வள்ளுவன் இன்று இருந்திருந்தால், இப்படி தான் எழுதியிருப்பார். ஆம், கடந்த சில தினங்களாக இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில், பெரும் அளவில் வன்முறைகள் நடைப்பெற்றதை கண்டிருப்பீர்கள். அதை பார்த்ததால் ஏற்ப்பட்ட தாக்கத்தை விட, இங்கு தமிழகத்தில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் வெளிப்படுத்திய அறியாமையே என்னை இப்படி யோசிக்க வைத்தது. இந்த CAA பற்றி பலரும் அலசி தெளிவுபடுத்திய பின் அதை பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏன், எதற்கு, […]
என்ன தான் சொல்லியிருக்கு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம். என்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்? இந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை […]
உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்
“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க? பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “ உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி. செய்தி என்பது என்ன? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
மீண்டும் இந்தியா இவ்வுலகை வெல்ல வேண்டும் அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல-சுவாமி விவேகானந்தர் மேற்கண்ட பொன்மொழிக்கேற்ப தற்போது இந்தியா செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாக வந்தே விட்டது.ஆம்!எது நடக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் முதல் பாகிஸ்தான், பத்திரிக்கையாளர்கள் வரை நினைத்தனரோ அது நடந்தே விட்டது இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதென எதிர்க்கட்சிகள்/பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து கலவரத்தை […]
குதிரைக்குக் குர்ரம், ஆனைக்கு அர்ரமா?
தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள். இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […]