இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும். தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான். ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! […]