இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அதன் உற்பத்தி வசதிகளை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை உருவாக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.