இதென்ன சமையல் குறிப்பு போல் இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இப்போதெல்லாம் திரைப்பட தயாரிப்பும் ஒரு ஃபார்முலா போல ஆகிவிட்டது. அதனால அதற்கான வழிமுறைகளை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது. இன்றைக்கு ஏராளமான படங்கள் பெட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்கின்றன அல்லது வெளியாகி தோல்வியைத் தழுவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு யோசனைதான் இது. முதலில் கதாநாயகன் — அவர் திரைக்கு வெளியே தன்னை ஒரு போராளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பொதுமேடைகளில் தமிழர்களுக்காகப் […]