மார்கழித் திங்கள் – 9

வாசனை வைத்தியம்–  புரியலையா? அரோமா தெரபி. அதாவது வாசனை தரும் மலர்கள், தண்டுகள், மரங்கள், பட்டைகள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள்.  அதுலயும் இந்த எண்ணெய் இருக்கு பாருங்க அதை விளக்கிலேயும் விட்டு எரிக்கலாம், இல்லேன்னா உடம்பிலேயும் தேய்க்கலாம். ஒவ்வொரு விதமான வாசனையும் ஒவ்வொரு விதமாக வினை புரிந்து உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நமக்கு நல்லது செய்யுதாங்க. இது மேல்நாட்டினரின் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஆனா பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நம்மாளுங்க கடைப்பிடிச்சிருக்காங்க.  […]

மார்கழித் திங்கள் – 8

“ எருமை மாடே” என்று திட்டு வாங்காத இளமைப்பருவம் இருக்காது.  கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பவர்களை இது மாதிரி திட்டுவார்கள்.  ஏன்? எருமை மாடு சுலபத்தில் அசையாது, ரொம்பவே நிதானமாகத்தான் நடக்கும்.  உருவமும் பெரிது. கன்னங்கரேலென்ற நிறம். போதாக்குறைக்கு எமன் இதன்மேல்தான் ஏறி வருவார் என்ற பெருமை வேறு.  கேக்கணுமா? ஆனா இந்த எருமைகள் அப்படி ஒன்றும் மோசமான விலங்குகள் இல்லை. சொல்லப்போனால் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்குவதற்கு எருமைப்பாலைப் போன்ற ஒரு […]

மார்கழித் திங்கள் – 7

கம்பராமாயணத்தை எழுதினாரே ஒருத்தர்–  சேக்கிழாரா? இல்லையா? யாரு.. கம்பரா? ஆச்சரியமாயிருக்கே…. சரி…. அவருக்கும் சோழனின் அரசவையில் இருந்த ஒட்டக்கூத்தருக்கும் எப்போதுமே ஆகாது. ரெண்டு பேரும் ரெண்டு கோஷ்டி – ஆனா ஒண்ணா இருக்கும் போது சிரிச்சிட்டே இருப்பாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள்போல. மறுபடியும் சொல்றேன் இதுல உள்குத்தெல்லாம் இல்லே. ஒருநாள் ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி. கம்பர் ஒருமுறை துமி என்ற வார்த்தையை ஒரு செய்யுளில் பயன்படுத்திவிட்டார். துமி என்றால் […]

மார்கழித் திங்கள் – 6

பாட்டு வாத்தியார் —   ரொம்ப பரிச்சயமான ஒரு வார்த்தை.    அந்த கால சினிமாவிலேர்ந்து கதைகள் வரைக்கும் பாட்டுன்னா ஆம்பிளை வாத்தியார்தான். ஏனுங்க?  சரி, இந்த பாட்டு எப்படி மனுஷ ஜாதி கத்துக்கிட்டது தெரியுமா? உடனே நீங்க பதில் சொல்லிடுவீங்க – பறவைகள்கிட்டேர்ந்துன்னு.  சரி, இந்த உலகத்திலே எத்தனை பறவையினங்கள் இருக்கு தெரியுமா?  சுமார் 9000 வகைகள் இருக்காம். அதிலே பாதி, அதாவது கிட்டத்தட்ட  4500 பறவையினங்கள் பாடுமாம்.  […]

மார்கழித் திங்கள் – 5

மதுரை–  அதாங்க நம்ம தளபதி இருக்கற ஊரு – அட நம்ம இளைய தளபதி முருகன் திருப்பரங்குன்றத்துல இருக்காருல்ல, அதச் சொன்னேன், அது மிகமிகப் பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகிறது. அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவனைத் தொழுகின்றோம். அதென்ன தெந்நாடுடைய சிவனே? சொல்லப் போனா சிவன் இருப்பது திருக்கயிலாயத்தில், அதாவது பாரதத்தின் வடகோடியில். ஏன் தெரியுமா […]

மார்கழித் திங்கள் – 4

“மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா’ வழக்கமாக அரசன் மந்திரியைப் பார்த்து கேட்பதாக கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்த காலத்துல மாசத்துல மூணு தடவை மழை பெஞ்சிருக்கும் னுநினைக்கறேன், இப்போல்லாம் வருஷத்துக்கு  மூணு மழை பெய்யறதே பெரிய விஷயமாயிருக்கு. சமீப காலமாக, குறிப்பாக திரு.ரமணன் வந்த பிறகு புதுசா ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டோம். “வெப்பசலனம்” காரணமாக மழை பெய்ததுன்னு சொல்லுவார். அதென்னங்க வெப்பசலனம்? அதுக்கு மழை எப்படிப் பெய்யுதுன்னு தெரிஞ்சுக்க்கணும். […]

மார்கழித் திங்கள் – 3

1983 உலகக்கோப்பை கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டங்கள் எல்லாமே இப்படியும் அப்படியுமாக மாறிமாறி வந்தன. திடீரென்று ஆஸ்திரேலியாவிடம் 162 ரன்களில் தோற்ற இந்தியா, மறுபடியும் ஆஸ்திரேலிய அணியை 118 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அப்போதைய பலமான அணியாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னார் இந்தியஅணி வெஸ்ட் இண்டீஸை வென்றது. இதையெல்லாம் ஒரு ஃப்ளூக் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று […]

மார்கழித் திங்கள் – 2

விரதம் இருப்பது என்பது பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழக்கம். மாதம் இருமுறை விரதம் இருப்பது என்பது சாதாரணம். கிருத்திகை, சஷ்டி முருகனுக்கு, சனிக்கிழமை பெருமாளுக்கு, திங்கட்கிழமை சிவனுக்கு, வியாழக்கிழமை ஆஞ்சனேயருக்கு என எப்படியாவது விரதம் இருப்பது என்பது நமக்கு மிகவும் தெரிந்த விஷயம். அதே மாதிரி குளிர்காலத்தில் உண்ட உணவு சீக்கிரம் செரிக்காது. நாம பாட்டுக்கு மே மாசம் மாதிரியே மூக்கப் பிடிக்கத்தின்னா? போதாக்குறைக்கு மார்கழி மாசம்பாத்து […]

மார்கழித் திங்கள் – 1

அதிகாலையில் எழுந்திருப்பவனும் இளமையிலேயே கல்யாணம் செய்து கொள்கிறவனும் வருந்தமாட்டார்கள் என்கிறது ஒரு சீனப்பழமொழி. நல்ல வேலை கிடைப்பதற்கே வருடங்களாகும் நிலையில் கல்யாணம் என்பது ரொம்பவே தள்ளித்தான் போகிறது இந்தகாலத்தில். வேலை கிடைத்தாலும் வீடு, கார் என்று வசதிகள் வந்த பிறகுதான் கல்யாணம் என்பதும் ஒரு பக்கம். ஆனாலும் சீக்கிரம் எழுந்து கொள்வதில் பிரச்சினைகள் இல்லையே? இரவு நிம்மதியான உறக்கம் இருந்தால்தான் அதிகாலையில் எழுந்திருக்க முடியும். பகலெல்லாம் உழைத்துக் களைத்த உடலுக்குக் […]