தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு: நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]
பொருளாதார மந்தநிலை…
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும் அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]
கடவுளுக்கு உருவமில்லை
கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுளுக்கு நிறமில்லை,மணமில்லை, எடையில்லை, பெயரில்லை. இப்படியெல்லாம் நான் சொன்னால் உடனே பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மத்தவங்க ஏற்றுக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை, நான் ஆய்ந்தறிந்த உண்மைகளை மட்டுமே எழுதுவேன் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள். சமீபத்தில் நெல்லை கண்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய விதமாக, அதென்ன சர்ச்சைக்குரிய, சர்ச்சையெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே, வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலே, கலவரங்கள் மூள வேண்டும் என்ற […]
சுத்தம் சோறு போடும்..
கழிவுகள் அகற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையாகும். எந்த ஒரு அரசு திட்டமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறும் போது அது தோல்வியையே சந்திக்கிறது. மக்களின் பங்களிப்போடு செயல்படும் அரசின் திட்டங்களும் மற்றும் தனியார் அமைப்புகளின் பொது நலன் திட்டங்களும் நல்லதொரு வெற்றியை சந்திக்கின்றன என்பதற்கு பெருமளவில் உதாரணங்கள் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு அரசாங்கங்களிலும் காணக் கிடைக்கின்றன. கழிவுகள் அகற்றுவதில் மக்களின் பங்களிப்பு என்பது தனிமனித […]
கலக்குற மச்சி
காதலிச்சிக்கிட்டிருக்க பசங்களக் கேட்டுப்பாருங்களேன் – எனக்கு அந்த மாதிரி ஒண்ணும் கெடயாது ப்ரோ. இவனுங்கதான் சும்மா இல்லாம மச்சி அந்தப் பொண்ணு ஒன்னத்தாண்டா பாக்குதுன்னு உசுப்பேத்தியே அப்புறம் ஒரு மாதிரி லவ் வந்துடுச்சு. இப்படித்தான் பல பேர் சொல்வாங்க. இதெல்லாம் சும்மாங்க, இது உண்மைன்னா நல்லா இல்லாத ஒரு பொண்ணைப்பாத்து உசுப்பேத்தி விட்டா இந்தப் பசங்க லவ் பண்ணுவாங்களா?ன்னு கேட்டுடாதீங்க. குமார்னு எனக்கு ஒரு நண்பன். ஒரு நாள் எல்லாரையும் […]
மோடியின் ஆசி பெற்ற ட்ரம்புக்கே உங்கள் வாக்கு..
தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் சுவர் விளம்பரங்களில் தவறாமல் இடம் பெறும் வாசகம் – புரட்சித் தலைவரின் ஆசி பெற்ற, கலைஞரின் ஆசி பெற்ற, அம்மாவின் ஆசி பெற்ற — இதாவது பரவாயில்லை, கட்சித் தலைவர்களுக்கு ஒவ்வொரு வேட்பாளரையும் தெரியும், கூட்டணி வைத்திருப்பதால் இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கும் – அன்னை இந்திராவின் ஆசி பெற்ற, ராஜீவ் காந்தியின் ஆசி பெற்ற, அன்னை சோனியாவின் ஆசி பெற்ற — சரி, என்ன செய்யறது… […]
I know
புரியாத புதிர் – இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அவர்களின் முதல் படம். இதிலே I know என்பதை பல்வேறு மாடுலேஷன்களில் ரகுவரன் சொல்வது ரொம்பவே பிரபலமாகப் பேசப்பட்டது 1990ல். படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோல நிறையவே புரியாத புதிர்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் நம் பதில் I don’t know தான். அதிலே ஒரு புதிர் இப்போது சொல்லவா? சுதந்திரம் அடைந்த […]
மோடி என்னும் மந்திரம்
17, செப்டம்பர் 1950. குஜராத். சுதந்திர இந்தியாவில், ஒரு தாய் தனக்கு பிறந்த குழந்தையின் இன்முகம் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள். அவள் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை, பின்னாளில் இந்த குழந்தைதான் உலகம் போற்றும் ஒரு மாமனிதனாக திகழப்போகிறான் என்று. இவன் தனது இளம்பருவத்திலும் மற்ற குழந்தை போன்று வீதியில் விளையாடி கொண்டிருக்கவில்லை. தாய் மண்ணும், அந்த மண்ணின் புகளுமே அவனது கண்ணில் தெரிந்தது. அந்த உன்னத எண்ணம் தான், […]
புங்கமரத்து நிழலில் ஒரு காளை
ஒரு காளைமாடு புங்க மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தது. ஒரு வாரமா அங்கேதான் நின்று கொண்டிருக்கிறது. காலமெல்லாம் பாரம் சுமந்து வண்டி இழுத்து ஓய்ந்து போன அதன் கால்கள் இப்போது அதன் உடலை சுமப்பதற்கே சக்தியில்லாமல் தொய்ந்து போயிருந்தன. இனிமேல் இதனால் பிரயோஜனம் இல்லையென்பதால் சொந்தக்காரன் அந்தக் காளையை விரட்டி விட்டான். அப்போது அந்த மரத்தின் அருகே வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சீப்பு […]
ஊரு சுத்தும் மோடி! இந்தியா பக்கம் வாடி!
திரைகடலோடியும் திரவியம் தேடு! இது யாருக்கு சொன்னாங்களோ தெரியாது. நம்ம பிரதமர் மோடி திரவியம் தேடுறாரா தெரியாது, ஆனா என்னமா ஊரு சுத்துறாரு, பார்ரா! மனுஷன் நம்ம வரி பணத்துல இது வர 55 வாட்டி வெளிநாடு போய் வந்திருக்காரு! அதுல ரஷ்யாவுக்கு மட்டுமே 4 தடவைபோய் வந்திருக்காரு! அப்படி ரஷ்யால மனுஷன் பண்ணது என்னவா இருக்கும்? கிழக்கு பொருளாதார மன்றம் (Eastern Economic Forum, EEF) இந்த EEF […]