சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் […]