புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சமீபத்தில் கூறிய சில வார்த்தைகளுக்கு எதிர்ப்புக் குரல் எழும்பியுள்ளது. எஸ் ஸி என்பது கறை என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசியிருக்கிறார், அவர் எவ்வாறு அப்படிக் கூறலாம்? என்பதுதான் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வி எங்கிருந்து எழுகின்றது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எஸ் ஸி — அதாவது ஷெட்யூல்ட் காஸ்ட் — தமிழில் அட்டவணை சாதியினர் அல்லது பட்டியல் சாதியினர். […]