இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது திமுக. அதையெல்லாம் இப்போ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் என்று திமுகவின் வரலாற்றை மட்டுமே பார்ப்போம். 1.எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. […]