டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.   “ வாங்க டோலர், இந்தாங்க  மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.   “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.   “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]

குதிரைக்குக் குர்ரம், ஆனைக்கு அர்ரமா?

தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள்.  இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […]

“காவி”ய நாயகன்

என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே? ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா? என்ன தப்புனு நினைக்கிறீங்க? ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்? எத்தனை வருசமா […]

ஃப்ரீடம் கப்பும் கீதையும்

எங்க தாத்தா ஒரு பயங்கர கிரிக்கெட் வெறியர்.  பிஷன் சிங் பேடின்னா உசுரு. பிரசன்னாவை வெறித்தனமா ரசிப்பார்.  இப்பவும் கிரிக்கெட் மேட்ச் நடந்தா எவ்வளவு நேரமானாலும் விடாமல் பார்ப்பாரு.  சோதனையா 2ம் தேதி விசாகப்பட்டினம் மேட்ச் அவரால பாக்க முடியாமப் போச்சு. ஏன்னா அவருடைய டிவி திடீர்னு கெட்டுப் போச்சு. உடனே எனக்கு ஃபோன் போட்டார். அடேய் டிவி வேலை செய்யலடா, எனக்கு மேட்ச் கமெண்ட்ரி நீதாண்டா குடுக்கணும்னார்.  எப்படித் […]

கலக்குற மச்சி

காதலிச்சிக்கிட்டிருக்க பசங்களக் கேட்டுப்பாருங்களேன் –  எனக்கு அந்த மாதிரி ஒண்ணும் கெடயாது ப்ரோ. இவனுங்கதான் சும்மா இல்லாம மச்சி அந்தப் பொண்ணு ஒன்னத்தாண்டா பாக்குதுன்னு உசுப்பேத்தியே அப்புறம் ஒரு மாதிரி லவ் வந்துடுச்சு. இப்படித்தான் பல பேர் சொல்வாங்க.  இதெல்லாம் சும்மாங்க, இது உண்மைன்னா நல்லா இல்லாத ஒரு பொண்ணைப்பாத்து உசுப்பேத்தி விட்டா இந்தப் பசங்க லவ் பண்ணுவாங்களா?ன்னு கேட்டுடாதீங்க. குமார்னு எனக்கு ஒரு நண்பன். ஒரு நாள் எல்லாரையும் […]

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…

ஆர் கே புரம் —  டில்லியில் பிரசித்தி பெற்ற ஒரு இடம்.  பெரும்பாலும் அரசு குடியிருப்புக்களாக இருக்கும். அதன் அருகிலேயே முனீர்கா.  இங்கிருந்து 620 என்ற டபுள் டெக்கர் பஸ் தினமும் காலை சுமார் 8 மணிக்குக் கிளம்பும்.  பெரும்பாலும் அரசு ஊழியர்களே பயணிக்கும் அந்த பஸ்ஸில் மாடியில் இடம் பிடிப்பதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கொஞ்சம் மெதுவாகத்தான் போகும். அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்தால் டில்லியில் இருப்பது மாதிரியே […]

வசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..

இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும்.  தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான்.  ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! […]

பணம் எங்கே மனம் அங்கே

இது கலி காலம். இந்துக்கள் அனைவரும் நம்மை காக்க மீண்டும் அந்த இறைவன் கல்கி அவதாரம் ஏற்று வருவார் என்று ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கும் காலம். பாவம், அவர்கள் அறிய மாட்டார்கள் – அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு கல்கி இருப்பதை. இன்னல் படுத்தும் இகழ்ந்தோரை இமைப்பொழுதில் காத்திட இக்கணமே இறைவன் வருவான் என்று கூறினால் இன்று இவ்வுலகிற்கு வருகை தந்த குழந்தை கூட பல் இளிக்கும் இந்த கலியுகத்தில் […]

ஜாவா சுந்தரேசன்

என்னோட பால்ய சினேகிதன்.  கல்லூரி காலங்களில் நாங்களெல்லாம் சினிமா நாடகம் என்று சுற்ற இவன் மட்டும் சிரத்தையாக கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து ஜாவா முடித்தான்.  படித்தது பி எஸ்ஸி கணக்கு என்றாலும் ஜாவா அவனுடைய மதிப்பை உயர்த்தியது. சினிமாவைப் போலவே சர்ரென்று உயரத்திற்குப் போய்விட்டான். ஹெலிகாப்டர் மட்டும்தான் வாங்கவில்லை. ஓ எம் ஆரில் 3 பெட்ரூம் ஃப்ளாட், நீலாங்கரையில் பண்ணை வீடு, தனக்கு ஒரு ஹூண்டாய், மனைவிக்கு ஒரு மாருதி […]

தமில் இனி வாலுமா?

தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் அல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது (அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு என்று சொன்னால் இன்னும் நம்புகிற மாதிரி இருக்கும்). எப்படீன்னு கேக்கறீங்களா? நீங்கள் யாரென்று கேட்டால் கிடைக்கும் பதில் தமிலர், தமிளர், டமிலர் என்பதாகத்தான் இருக்கிறது. அப்போ தமிழர்கள் யார்? தமிழ் எங்கே போனது? தமிலும் தமிளும் டமிலும் எப்படி உள்ளே வந்தது? இன்றைய இளைய தலைமுறை ழகரத்தை அறவே […]