
நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.
“ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.
“கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.
“கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க வெளியே எங்கேயும் சாப்பிடறதில்லைன்னு முடிவெடுத்ததா கேள்விப்பட்டேன். ஆனாலும் இவ்வளவு ஆச்சாரமா இருக்கக்கூடாது” நானும் கொஞ்சம் நக்கலடித்தேன்.
“ எல்லாம் எத்தனை நாளைக்கு? இந்தக் கொரோனா போகட்டும். அப்புறம் பாருங்க”
“ அப்ப்டியா டோலர்? சீனாவிலே இப்படித்தான் கொரோனா போயிடுச்சுன்னு வெளியே வந்தாங்க. இப்போ கொரோனா செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிடுச்சாம். உங்களுக்கென்னங்க? இப்பவே கூட போய் யாரை வேணும்னாலும் கட்டிப் பிடிச்சுக்கலாம். உங்க இஷ்டம்”
“அய்யய்யோ செகண்ட் இன்னிங்க்ஸா? வேணவே வேண்டாம். எல்லாரும் ஒரு வருசத்துக்கு தள்ளியே நில்லுங்க. அடுத்த தமிழ்ப்புத்தாண்டுக்கு பாத்துக்கலாம்”
“என்ன சொன்னீங்க டோலர்?”
“தமிழ்ப்புத்தாண்டுன்னு சொன்னேன்”
“டோலர் உங்களை ஒண்ணு கேக்கவா? எந்த வெள்ளைக்காரனாவது ஜனவரி 1ம் தேதியை ஹேப்பி இங்க்லீஷ் ந்யூ இயர்னு சொல்றானா?”
டோலர் அமைதியானார் “இல்லே”
“எந்த மலையாளியாவது மலையாள புத்தாண்டு வாழ்த்துகள்னு சொல்றாங்களா?”
“இல்லே”
“அப்புறம் ஏன் டோலர் நீங்க மட்டும் இன்னும் தமிழ்ப்புத்தாண்டுன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க? நம்ம பிள்ளையை பிள்ளைன்னுதான் சொல்லுவோம், அடுத்தவங்க பிள்ளையத்தான் அண்ணன் பிள்ளை, தம்பி பிள்ளை, பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைன்னு வித்தியாசப்படுத்தி சொல்லுவோம். புரியுதா?”
எப்பவுமே அடிவாங்கியதும் கொஞ்ச நேரம் கழித்துதான் நண்பரின் மூளை வேலை செய்யும்.
“ஹஹஹஹ அது ஏன் தெரியுமா? இது தமிழ்ப்புத்தாண்டே கிடையாது”
“தமிழ்ப்புத்தாண்டு கிடையாது? அப்புறம் ஏன் தமிழ்ப்புத்தாண்டுன்னு சொல்றீங்க?”
“அதாவது தை முதல் நாள்தான் புத்தாண்டு. ஆனா இந்த ஆரிய பார்ப்பன சதிகாரர்களால் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுன்னு ஆயிடுச்சு”
“அப்படியா? அப்போ தை மாசம்தான் தமிழர்களின் முதல் மாதமா?”
நண்பர் என்னைப் பார்த்து பெரிதாகச் சிரித்தார். “அப்படி வாங்க. இந்த சித்திரை வைகாசி இதெல்லாம் தமிழ் மாதங்களே கிடையாது. இதுவும் ஆரிய பார்ப்பனீய வடமொழி திணிப்பு”
எப்பவுமே நண்பர் யோசித்து பதில் சொன்னால் எக்குதப்பாக மாட்டிக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தம்.
“ ஆமாம் டோலர், சித்திரைன்னு தமிழ்லே சொல்ரோம், சைத்ரன்னு வட மொழியிலே சொல்றான். ஆக இந்த சித்திரை வைகாசி இதெல்லாம் வடமொழி ஆரிய பார்ப்பன சதி. சரி டோலரே, இதெல்லாம் வடமொழியென்றால் தமிழன் மாதங்களுக்கு வைத்த பேர்கள் என்ன?”
“என்னாது?”
“ இல்லே டோலரே, சித்திரை என்பது வடமொழி, இந்த மாதத்துக்கு தமிழ்ப்பெயர் என்ன?”
“ஏப்ரல்” டகாரென்று பதில் வந்தது நண்பரிடமிருந்து.
“அப்போ கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முந்தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடிகள் மாதங்களுக்குப் பெயர் வைக்கவில்லை, அதுக்கப்புறம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்த வெள்ளைக்காரன்தான் மாதங்களுக்குப் பெயர் வைத்தான்னு அர்த்தமா?”
நண்பருக்கு விளங்கவில்லை.
“ அதாவது டோலரே, ஏப்ரல் என்பது ஆங்கில மாதம். நான் கேட்டது தமிழ் மாதப் பெயர்.”
நண்பர் நெளிந்தார்.
“அப்போ தமிழில் மாதங்களுக்குப் பெயரே இல்லையா ?” என்னையே கேட்டார் நண்பர்.
“தமிழர்கள் தமிழையும் வடமொழியையும் ஒன்றாகப் போற்றினார்கள். அதனால்தான் வடமொழி மாதங்களின் பெயர்களையே தமிழிலும் பயன்படுத்தினார்கள். உங்களை மாதிரி ஆதாயத்துக்காக வெள்ளைக்காரனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாட வேண்டிய அவசியம் சங்ககாலத் தமிழனுக்கு இல்லை டோலரே”
நண்பரிடமிருந்து பதிலே இல்லை. டகாலென்று கிளம்பி வெளியே போய்விட்டார்.
ஸ்ரீஅருண்குமார்