சென்னை:

தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் அதிமுகவையும் அமமுகவையும் இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார், அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், அதிமுகவுடன் சேர்வது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழிசை கருத்து

இந்நிலையில் தினகரனின் அமமுக கட்சியினர் தங்களுக்கும் தூதுவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் உயர்கல்வி மேம்பாட்டு குறித்த கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.

தர்மசங்கடமான யுத்தமா? தினகரன் ஒரு கருத்தைச் சொன்னார். அதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் எந்த சூழ்நிலையில் அவரைப் பார்த்தேன் என்று சொல்லிவிட்டார். அது தர்மயுத்தமா, தர்மசங்கடமான யுத்தமா என்று சொல்ல இயலாது. குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், தினகரன் கட்சியைச் சார்ந்தவர்கள் சில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அரசியல் நிகழ்வு யார் யாரைப் பார்த்தார்கள் எதற்காக பார்த்தார்கள் என்பது விளக்கம் தரப்பட்டிருக்கிறது. டி.டி.வி தினகரன் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினார், இது அரசியல் நிகழ்வு. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், தினகரன் கட்சியைச் சார்ந்தவர்கள் சில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.அரசியல் நிகழ்வு யார் யாரைப் பார்த்தார்கள் எதற்காக பார்த்தார்கள் என்பது விளக்கம் தரப்பட்டிருக்கிறது. டி.டி.வி தினகரன் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினார், இது அரசியல் நிகழ்வு. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.