
என்னங்க உங்க தல வேட்டி சட்ட போட்டு கலக்கிட்டாரு போல?
என்ன இப்படி சொல்லிட்டீங்க. தல மொத மொதல நடிச்சதே ஒரு வேட்டி விளம்பரத்துல தானே. சும்மாவா?
என்ன சொல்லுறீங்க?
தல அஜித் நடிச்ச விசுவாசம் பத்தி தானே கேட்டிங்க?
இல்ல இல்ல, நான் சொன்னது சினிமா தல இல்ல. நிஜ வாழ்க்கையில், நம் இந்தியாவுக்கே தல. பிரிதமர் மோடி அவர்களை தான் சொன்னேன்.
ஓ, நீங்க மகாபலிபுரம் விசிட் பத்தி சொல்லுறீங்களா?
ஆமா, ஆமா.
ஆமாங்க, நாம்பலே வேட்டி கட்டுறத விட்டாச்சு, இவரு மாதிரி நாலு பேரு போட்டு ஞாபகம் படுத்தினா தான் அந்த மாதிரி ஒன்னு இருக்கிறதே தெரியும் போல.
அது சரி, எதுக்கு இப்ப இங்க மஹாபலிபுரம் வந்து இந்த வேலை?
என்ன வேலையை சொல்லுறீங்க?
வந்தமா, சீனா தலைவரோட பேசினோமா, போனோமானு இல்லாம, காலையில பீச் வாக்கிங், கூடவே குப்பைகளை சுத்த படுத்துற மாதிரி வீடியோ எல்லாம்? நம்ப மக்கள் எப்பிடியும் இது விளம்பரம் அப்பிடின்னு தானே சொல்லப்போறாங்க?
அவங்க அப்படி சொல்லுவாங்க, இவங்க இப்படி சொல்லுவாங்கனு ஒரு தலைவர் இருக்க முடியாது. அப்படி இருந்தா அவர் தலைவரே இல்ல. எது சரியோ, அதை அவங்களும் செய்யணும், மற்றவர்களையும் செய்ய வைக்க உந்துதலா, உறுதுணையா இருக்கணும். ஒரு தலைவன் என்பவன் ஒரு உதாரண புருஷனாக இருக்க வேண்டும். தன்னை பின் தொடரும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து திகழவேண்டும். அப்பிடி பார்க்கும் போது, இது விளம்பரமா இருந்தால் கூட நல்லது தான்.
அதும் சரி தான். சரி, எப்பவுமே தாஜ்மஹால் தானே வெளியூர் தலைவர்கள் வந்தா சுத்தி காட்டுவாங்க, இப்ப என்ன இந்த பக்கம்?
சரியா சொன்னீங்க. வெளிநாட்டுல இருக்குறவங்க, இந்தியாவிற்கு சுற்றுலா வரவங்க யாரை கேட்டாலும், அவங்க வழக்கமா சொல்லுறது – தாஜ்மஹால், டில்லி, உதய்பூர், ஜெய்ப்பூர். தென்னிந்தியா பக்கம்னா, கேரளா. இதுமட்டும் தான் அவங்களுக்கு இந்தியா. இன்னும் போனா, காஷ்மீர் பத்தி தெரியும். அதுவும் நல்ல விசயத்துக்கு இல்ல.
ஆமாங்க, அது உண்மை தான். என்னமோ நம்ப இந்தியால தாஜ்மஹால் விட்டா வேற எதுவுமே இல்லாத மாதிரி. ஏன், தமிழ்நாட்டுல எவ்வளவு நல்ல நல்ல இடம் இருக்கு? மஹாபலிபுரம், தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இப்படி நிறைய கலைநயம் மிக்க இடங்கள் இருக்கே.
அதனால தான் இந்த மகாபலிபுரம் சந்திப்பு.
புரியலீங்களே.
உலகத்திலேயே மிக முக்கியமான ஆசிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு. சும்மாவே மோடி எங்க போனாலும், என்ன செஞ்சாலும் அது இந்த மீடியாகளுக்கு தீனியா போச்சி. இதுல சீனா தலைவர் வேற கூட வராரு. கேட்கணுமா, உலகம் முழுக்க இதை ஆர்வமா பார்த்துட்டு இருக்கு. அப்படி இருக்க, இந்த மகாபலிபுரம் பத்தியும், அதன் கலைநயம் மிக்க கோயில் பற்றியும் உலக மக்கள் ஆர்வமா தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு.
அதாவது இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்குனு தெரிஞ்சா ஒருவேளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்க வரலாம்னு சொல்ல வரீங்க, சரியா?
கண்டிப்பா. நம்ப நாட்டுல என்ன இருக்குனு வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கு நாம்ப தான் எடுத்து சொல்லணும். கொஞ்ச நாள் முன்னாடி, மோடி வேற நம்ப இந்திய நாட்டு மக்களை இந்தியாவுல 15 இடம் சுத்தி பார்க்க சொல்லி சுற்றுலா வளர்க்க தூண்டினாரு. வடக்குல இருந்து வர பாதிபேர் தமிழ்நாடு வந்தா நேரா ராமேஸ்வரம் தான் போவாங்க. இப்ப, இந்த மாதிரி ஒரு அருமையான இடம் இருக்குன்னு தெரிஞ்சா, இங்க வரவும் சாத்தியம் இருக்கு இல்லையா?
சரியா சொன்னீங்க. அதனால தான் நம்ம பாரம்பரிய நாட்டியம் எல்லாம் வச்சி சீனா தலைவரை வரவேற்றங்களோ?
ஆமாம். நம்ப ஊரு நல்ல விஷயங்களை எப்பிடி பார்த்து பார்த்து வெளியுலகத்துக்கு எடுத்து சொல்லுறாங்க. நல்ல விஷயம் தானே.
என்ன செஞ்சா என்ன, கடைசியில மோடி ஒழிகனு கத்திட்டு திரியாப்போறாங்க இங்க. நேத்து கூட பாருங்க கோ பாக் மோடினு ஒரே ட்ரெண்டிங்காமே.
அது தெரிஞ்சுது தானே. அதுலயும், தமிழ்நாட்டை விட அக்கம்பக்கத்து நாட்டுல இருந்து தான் பாதிக்கும் மேல ட்ரெண்ட் வந்துச்சாம். எப்பிடியோ அவங்க வீட்டு அடுப்பு ஏறிய இவரு உதவி செய்யறாரு இல்லையா.
எப்புடி?
பின்ன, போடுற ஒவ்வொரு ட்வீட்க்கும் காசு சம்பாதிப்பங்களே, சும்மாவா?
ஹா ஹா ஹா. சிரித்த படியே கலைந்தார்கள் அந்தமண்ணின் மைந்தர்கள்.