என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே?

ஆமாங்க.

அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா?

என்ன தப்புனு நினைக்கிறீங்க?

ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்?

எத்தனை வருசமா அப்படி வெள்ளை உடையில், நெற்றியில் பொட்டு ஏதுமின்றி உத்திராட்சம் மாலைகள் இன்றி அவரை பார்க்கறீங்க நீங்க?

பல வருசமா அப்பிடி தானே இருக்காரு அவரு?

எத்தனை வருசமா அப்படி இருக்குறாருனு ஆராய்ச்சி பண்ணி பார்த்தீங்கன்னா, இது இப்ப மிக சமீபத்தில் திராவிடம் பேசி வந்தவர்கள் காலத்தில் தான் துவங்கியது தெரியும்.

அது எப்பிடி சொல்லுறீங்க?

ரொம்ப வேண்டாம், கொஞ்சம் 40-50 வருஷம் பின்னாடி போயி அன்றைய புத்தகத்தில் என்ன மாதிரி வள்ளுவர் இருக்காருன்னு பார்த்தீங்கன்னா உங்களுக்கே உண்மை புரியும்.

அப்படியா? அப்புறம் எப்பிடி இந்த மாதிரி அவரு மாறினார்?

அவரு மாறலைங்க, இவனுங்க தான் மாத்தி கெடுத்து வச்சிருக்கானுங்க.

எதுக்காக?

பல ஆண்டு காலமா இந்து மதத்தில் இருக்குற நல்ல விஷயங்களை திருடி தங்கள் மத சின்னங்களாக, வழக்கங்களாக மாற்றி வருகிறது ஒரு மதம். இது இங்க மட்டும் இல்ல, ஐரோப்பாவிலும் அன்று இருந்த மத நம்பிக்கைகளில் இருந்து தங்களுக்கு பிடித்த, தோதாக இருந்த வழக்கங்களை திருடி தங்கள் வழக்கங்களாக கொண்டு, மற்றவைகளை “”பேகன்” வழக்கமாக மாற்றிய வரலாறு இன்றும் உள்ளது.

உதாரணமாக, கிறிஸ்துமஸ் பண்டிகையை எடுத்துக்கொள்வோம்.

அதில் என்னங்க குழப்பம்? இயேசு பிறந்த தினமான டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுது. இது சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.

அதே குழந்தை தான் கிஸ்துமஸ் தாத்தா வந்து பரிசு வழங்குவாருனு நம்பிட்டு இருக்கு. அதும் உண்மையா?

அது வந்து..

 

அது மாதிரி தான் இந்த பண்டிகை தினமும். டிசம்பர் 25ம் தேதியே இயேசு பிறந்தார் என்பதே பல இடங்களில் பல அறிஞர்களால் கேள்விகளாக எழுப்பப்பட்டுள்ளது. வாட்டிகன் கூட அதை ஒத்து கொண்டுள்ளது.

உண்மையில் அது முன்பு இவர்கள் “பேகன்” என்று ஒதுக்கிய மக்களால் குளிர் காலத்தை வரவேற்க, சூரிய பகவானை கொண்டாடிய பண்டிகையே ஆகும். ஆனால், இவர்கள் அதை தங்கள் சுயநல காரணமாக பெயர் மாற்றி கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ரெண்டு நிமிடம் ஒதுக்கி நம்ப கூகிள் மாமாவை கேட்டாலே எல்லா விஷயத்தையும் உங்கள் கண்முன் கொண்டு சேர்ப்பார்.

இது போன்று வரலாற்றை புரட்டி பார்த்தால் இவர்கள் எந்த எந்த நாட்டில் இது போன்ற லீலைகள் மேற்கொண்டுள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரியும்.

அது மாதிரியே திருவள்ளுவரையும் ஒரு கிருத்துவராக மாற்ற இங்கே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே முயற்சிகள் துவங்கின. என்ன, அன்று இது போன்ற சமூக வலைத்தளங்களும், தொழிற்நுட்பங்களும் இல்லாத காரணத்தால் சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நடந்த இதுபோன்ற அயோக்கிய செயல்கள் பொது மக்கள் பார்வைகளில் படவில்லை.

மேலும், பொதுவாகவே இந்து மக்கள், நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன, நம்ப மேல விழுந்து புரண்டாம இருந்தா போதும்னு இருக்கும் மனோநிலை கொண்டவர்கள். அதற்கு அவர்கள் கொடுத்த விலையோ கொஞ்சம் நஞ்சம் அல்ல.

சில மாதங்களுக்கு முன்னால் இப்படி தான், திருக்குறளில் இந்து மத கடவுளை பற்றி ஒன்றுமே இல்லை என்று கொடி பிடித்து வந்தனர். அதற்கு பதிலடியாக வெளியிட்ட பதிவே திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையப்பா.

இப்ப சமீப காலமாக சமூக தளங்களில் வரும் காணொளிகளும் பேச்சுகளும் திருவள்ளுவரை மீண்டும் கிருத்துவராக பிரதிபலிக்க துடிப்பதை காண நேர்ந்ததால் உண்மையை மக்கள் முன் வைக்க நம் அனைவருக்கும் கடமையுள்ளது.

சைவமே கிருத்துவத்தில் இருந்து வந்தது என்று கூட ஒரு புறம் பொய் பிரச்சாரம் நடந்து கொண்டுள்ளது. இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கயவர்களால் கூறப்படுவதில்லை. பல திட்டமிடலுடன் முறையாக இது மக்கள் மனதிற்குள் கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒருவேளை, உண்மையிலேயே திருவள்ளுவர் கிறித்துவரா இருந்திருந்தா இந்நேரம் சும்மாவா இருந்திருப்பானுங்க? அவருக்கு புனிதர் பட்டம் குடுத்து புனிதர் வள்ளுவர்னு ஒருத்தர கொண்டு வந்திருக்க மாட்டாங்களா?

நாம்ப அவங்க எது சொன்னாலும் கண்டுக்காம இருந்தா, அதுவும் நிச்சயம் நடக்கும்.

இன்னைக்கு விநாயகர் வடநாட்டிலிருந்து வந்தவர், வட நாட்டில் இருப்போர்க்கு முருக பெருமான் பற்றி தெரியுமா என்று மக்களை குழப்பி வர துவங்கியுள்ளனர். இப்படியே விட்டா நாளைக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்ற கந்தனின் பக்த்தை அவ்வை பிராட்டியாரையே அன்னை தெரசா அவ்வைன்னு சொல்லிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.

அதனால் தான் இது போன்ற பொய் குழப்பங்கள் தலையெடுக்கும் போதெல்லாம் அதற்கு தவறாமல் ஜனநாயக முறையில் தகுந்த பதில் கூறுவது அறிஞர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைத்து மக்களின் கடமையாக இருக்கிறது.

நம்மில் எத்தனை பேருக்கு வள்ளுவருக்கு ஒரு கோவில் இருப்பது தெரியும்? ஆம், இன்றும் சென்னை மயிலையில் அவருக்கு ஒரு கோவிலுள்ளது. வாழ்க்கைக்கு தேவையான மந்திரத்தை எழுதிய வள்ளுவர் எழுதியதோடு நில்லாமல் அவரது துணைவி வாசுகியுடன் வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.

அடுத்த முறை நீங்கள் மயிலை செல்லும்போது இந்த ஆலயத்திற்கும் சென்று அவரை வணங்கி அருள்பெற வாழ்த்துக்கள்.

நன்றி

 

மகேஷ்

One Reply to ““காவி”ய நாயகன்”

  1. இது சுத்த பேத்தல்.. திருவள்ளுவர்தான் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர்.. திராவிட வள்ளுவர் என்பதே மருவி திருவள்ளுவர் ஆனது. திராவிடக் குறள் என்பதுதான் சுருங்கி திருக்குறள் ஆனது. திருவள்ளுவர்தான் பரங்கிமலையில் உள்ள் புனிதர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.