கடந்த சில வருடங்களாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிக அளவிலான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவதை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது , இது அந்த பகுதி உள்ளோர் மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது.
இந்துமுன்னணி புகார்..
திருப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் குடியேறியுள்ளதாகவும் ,
அவர்கள் திடீரென்று திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தொழுகைக்கூடங்கள் அமைக்கின்றனர் என்றும் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகிறார், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்தும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கொலை கொள்ளை..
இது போன்று சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பெரும்பாலோர் தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் . கொலை கொள்ளை போன்ற குற்றங்களை செய்யும் அவர்கள் தப்பிச்ச சென்று வங்கதேசத்தில் ஒளிந்து கொள்வதால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தமிழக போலீசார் திணறி வருகிறார்கள்.
கோவையிலும் இதே போன்று பெருமளவில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் குடியேறி வருவதாக உள்ளூர் மக்கள் சிலர் அச்சம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.