
அரசியல் என்றால் உங்கள் பார்வையில் என்ன?
யோசித்துவைத்துக்கொள்ளுங்கள் கடைசியில் என் விடையை பார்ப்போம்
ஒரு அரசியல் கட்சியை ஒரு சமுதாயமோ(சாதி),குழுவினரோ(எ.கா.
அ)இட ஒதுக்கீடு
ஆ)அரசியல் பிரதிநிதித்துவம்
இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட தங்களுக்கு அரசாங்க வேலையும் கிடைத்து அரசியலில் வாய்ப்பும் கிடைத்தால் விடுவார்களா
திமுகவின்(கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும்) இத்தனை ஆண்டு கால அரசியல் வெற்றிக்கு மேற்கண்ட விஷயங்களே காரணம்
இன்று ஒரு அரசு பள்ளி ஆசிரியரிடமோ,இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற திமுக கவுன்சிலரிடம் ஏன் ஒரு தொண்டனிடமே கூட நீங்கள் சென்று உங்கள் தலைவர் நம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை எனவே ஓட்டு போடாதீங்க என்று சொல்வது ஏன் எடுபடவில்லை என்று யோசிக்க வேண்டும்
அப்படி யோசிக்காமல் தமிழக மக்களுக்கு அறிவே இல்லை என்று சொல்வது பயன் தராது
மூன்று வேளை உணவுக்கு கஷ்டபட்டவர்கள் எட்டாம் கிளாஸ்(அந்த காலத்துல),பி எட் படித்துவிட்டு இன்று 2 தலைமுறைகளுக்கு அதிக உழைப்பில்லாமல் சம்பாதிக்க வழிசெய்த கட்சியை,கார்,3பைக்,ஆடம்பர வாழ்க்கை,பணிச்சுமை இல்லாமை, வேலை போய்டுமோ என்ற கவலை இல்லாமை ஆகிய வசதிகளை தாங்கள் அனுபவிக்க காரணமாக இருந்த கட்சியை விட்டுட்டு அவர்கள் பாஜகவுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்?
இன்றும் பல குடும்பங்களுக்கு (ஏன் என் குடும்பமே ஓடுவது கருணாநிதியால் தான்)நிலையான வேலை தந்து வாழ்க்கை பற்றிய பயமின்மையை ஏற்படுத்திய திமுகவுக்கு எதிராக பலரும் பேசுவது நம் நாட்டின் மேல் உள்ள அக்கறையால் தான்
சுவாமி விவேகானந்தரிடம் சீடர் ஒருவர் கேட்டாராம் ஏன் அமெரிக்காவில் சொற்பொழிவு ஆற்றியது போல இந்தியாவில் செய்யவில்லை என அதுக்கு அவர் சொன்னார் “உங்கள் நாட்டில் சோற்றுக்கே வழியில்லை இதில் மதத்தை பற்றி எங்கே பேச! முதலில் அவர்கள் பசியை அடக்கிய பின்னே மதவுணர்வை அவர்களிடம் விதைக்க முடியும்!எனவே வேலை செய்யுங்கள்”என்றார்
பாஜக ஹரியானாவில் ஒரு ஜாட் அல்லாதவரை முதல்வராக்கியிருக்கிறது, மராத்தாக்கள் ஆதிக்கம் மிக்க மகாராஷ்டிராவில் ஒரு பிராணமனரை முதல்வராக்கியிருக்கிறது,உபியி
இது தான் அரசியல் என்பதையாவது தமிழக இந்துத்துவர்களும் பாஜகவினரும் உணருவார்களா!
1980 களில் நாடு முழுவதும் நடந்த தாழ்த்தப்பட்டோர்களின் எழுச்சி(இடைநிலை சாதிகளின் அரசியல் எழுச்சிக்கு எதிராக) இங்கே இடைநிலை சாதிகள் வசம் இருந்த திராவிடத்தால் பெரியார் பெயரை சொல்லி மழுங்கடிக்கப்பட்டது
நம் மக்களும் விழிப்புணர்வு இன்றி திராவிட பரப்பியக்க(populism)மயக்கத்தி
உபியில் பாஜக ஆதரவுடன் மாயாவதி முதல்வர் ஆகியும் இங்கு திருமாவளவன் எம்எல்ஏ ஆக கஷ்டப்படுவதும் இதனால் தான்
தாழ்த்தப்பட்டோர்,மற்றும் பிற எண்ணிக்கை சிறுபான்மை சாதியினரை பாஜக பிரதிநிதித்துவப்படுத்த தவறும் பட்சத்தில் இங்கே அது 3% ஓட்டு வங்கியை தாண்டாமலேயே அழிந்து போகலாம்
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் சக இந்துக்களிடம் சாதி பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பதும்
இப்ப முதல் கேள்விக்கே மீண்டும் வருவோம் அரசியல் என்றால் என்ன?
பதில்: கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்துவ விஷயங்களிலும், தனது கொள்கை வெற்றி பெறத் தேவையான, முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொள்வதே அரசியல்.
இதை செய்தது(செய்கிறது) இந்துத்துவம் இதை தமிழகத்தில் நடத்தப்போவதும் இந்துத்துவம் தான்
ஆனால் அதை நாம் எப்போது உணர்கிறோமோ அன்றே நமக்கு விடியல்