சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன,அதில் அதிக பட்சமாக 53 வருடங்கள் இங்கே காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புவரை கூட தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் இங்கே காங்கிரஸ் ஆட்சிதான்.
எலியும் பூனையும்…
ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டுகள் பல வருடங்களுக்கு முன்பே சந்தர்ப்பவாதமாக இணைந்து விட்டன.
இருவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தப்படி ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் ,அறிவுசார் விஷயங்களில் கம்யூனிஸ்ட் என்று பிரித்து செயல்படுகின்றனர்.
இன்றைக்கு பெரும்பாலான ஊடகங்களில் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அரசுத் துறைகளில் நீதிபதிகள் முதற்கொண்டு சாதாரண பேங்க் கிளார்க் வரை இவர்களை ஊடுறுவ அனுமதி அளித்தது காங்கிரஸ்.
நீதிபதிகள்..
சமீபத்தில் கூட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போர் கொடி தூக்கிய நிகழ்வை நாம் பார்த்தோம்.
அன்றே அதே நீதிபதிகள் பின்வாசலில் சென்று கம்யூனிஸ்ட்டின் D. ராஜாவைச் சந்தித்து ஆலோசனை செய்த காட்சிகளையும் நாம் பார்த்தோம்.
சீர்கெட்டு கிடக்கும் அரசு இயந்திரம்..
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சீர்கெட்டு கிடக்கும் இந்த இயந்திரத்தை அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய நபர்களையே அனைத்துத் துறைகளிலும் வைத்துக் கொண்டே சீர் செய்வதென்பது எவ்வளவு கடினம் தெரியுமா?
ஆனால், அதையும் தாண்டித்தான் சாதித்து வருகிறார் மோடி அவர்கள்.இந்த ஊழல் அதிகாரிகளை வைத்துக் கொண்டே,
அதாவது இருக்கும் சிஷ்டத்திற்குள்ளேயே அவர் செய்ய நினைக்கும், கொண்டு வந்த நல்ல திட்டங்களை செயல்படுத்த திணறி வருகிறார்.
உதாரணமாக,பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்தியாவில் இருக்கும் அத்துனை வங்கி அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு கருப்புப்பண முதலைகளுக்கு அவர்களது பணத்தை நேரிடையாகவே மாற்றிக் கொடுத்துள்ளனர்.
சேகர் ரெட்டி போன்றவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தது இப்படித்தான்.
மேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்களைக் கூட மக்களிடம் இவர்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
முத்ராவும் தமிழகமும் ..
முத்ரா திட்டத்தின்படி தொழில் முனைவோரை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு 50 ஆயிரம் முதல் 5 கோடி வரை கடனாக வழங்கி வருகிறது.
இதில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற எந்த விதமான செக்யூரிட்டியும் தேவையில்லை.
இந்தத் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கடன் பெற்ற பயனாளிகள் இருப்பது தமிழகத்தில் என்று புள்ளி விபரம் கூறுகிறது.
ஆனால், இங்கே நடப்பது என்ன?,வங்கி அதிகாரிகள் வழக்கம் போல தங்களுக்குத் தெரிந்தவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு கடன்களை வாரி வழங்கி வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக கடன் பெற்றவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்தான்.
உண்மையிலேயே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை குடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு கிடைப்பதே இல்லை.
இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்?,மோடியையா இந்த கேடுகெட்ட அதிகாரிகளையா?
மோடி அரசின் வீடு வழங்கும் திட்டம்…
இதுவும் கூட எப்படி சமத்துவபுர வீடுகள் தி.மு.கவினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டனவோ அதே போல பார்த்துப் பார்த்து இந்த அதிகாரிகள் முறைகேடாக இந்த வீணாய் போன கட்சிக்களைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்படுகிறது.
இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்? மோடியையா அல்லது இந்த கேடுகெட்ட அதிகாரிகளையா?
Smart City…
அதிகாரிகள்தான் இப்படி என்றால் நமது தமிழக அரசாங்கத்தின் லட்சணத்தைப் பாருங்கள்.
இந்தியா முழுவதும் நூறு நகரங்களை Smart Cityகளாக அறிவித்த மோடி அரசு அதில் 11 நகரங்களை தமிழகத்திற்கு ஒதுக்கியது.
நம்மை விட இரண்டு மடங்கு பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்திற்கும் 11 தான் ஒதுக்கியது இந்த தமிழர் விரோத பாஸிஸ மோடி அரசு.
அதன்படி ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு வருடத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கும் அதை வைத்துக் கொண்டு அந்த நகரங்களை வளர்ச்சியடைச்செய்ய (Smart ஆக மாற்ற வேண்டியது) வேண்டியது மாநில அரசு.
ஆனால், கடந்த மூன்று வருடங்களில் வெறும் பத்து சதவீத நிதியைக் கூட இவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை.
இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்? திட்டம் தீட்டிய மோடியையா? செயல்படுத்தாத தமிழக அரசையா ?
பயிர் காப்பீட்டுத் திட்டம்..
இதே போலத்தான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கூட மற்ற மாநிலங்களை விடக் மிகக் குறைவாக வெறும் 13,000 பேர்களுக்கு மட்டும்தான் காப்பீடு செய்திருந்தார்கள்.
அதன் பின் எங்களுக்கு இழப்பீடு வேண்டும் என்று கேட்டு டெல்லியில் அம்மணமாக ஓடி மோடியைத் திட்டி அசிங்கப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.
இது போலத்தான் மோடி அரசின் அத்துனை திட்டங்களும் இங்கு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
கொண்டு சேர்க்குமா தமிழக பாஜக..
ஜன் தன் அக்கவுண்ட் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே இறப்புக் காப்பீடு இருக்கிறது என்று எத்துனை பேருக்குத் தெரியும்?
இதை எடுத்துச் சொல்ல வேண்டிய வங்கி அதிகாரிகள் என்றாவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா?
அல்லது இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தமிழக பா.ஜ.க எடுத்துச் சொல்லி இருக்கிறதா?
TV விவாதங்களில் மோடி என்ன செய்துவிட்டார் என்று இவர்கள் விவாதம் நடத்தும் பொழுது வேதனையாக இருக்கிறது.
புதியதாக மட்டும் ஆயிரக்கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
மிகப்பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்.60 ஆண்டுகள் காங்கிரஸ் 60 லட்சம் கோடி கடனை வாங்கி வைத்திருந்த நிலையில்.
நான்கு ஆண்டுகளில் ஒற்றை ரூபாய் கடன் வாங்காமல் பழைய கடன்களை அடைத்து வருகிறார் மோடி.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஊழல் புகார் கூட இல்லாமல் ஆண்டு வருகிறார்.மோடி ஆட்சியின் சாதனைகளை வீடு தோறும் கொண்டு சேர்க்குமா தமிழக பாஜக?
-உமா கார்த்திக்
good analysis about Modiji Government schemes