பி எஸ் என் எல் –  இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் ஆழ்த்தி விட்டார், இழுத்து மூடப் போகிறார்அம்பானிக்கு சாமரம் வீசுகிறார் –  அரசு துறைகளை இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்நாட்டையே தனியார் கார்ப்பொரேட்டுகளுக்கு விற்று விடுவார் – இப்படியெல்லாம் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு குற்றச்சாட்டு நடமாடிக் கொண்டிருக்கிறதுஆச்சரியம் என்னவென்றால்  கம்யூனிஸ்டுகள் தவிர இந்தக்   குற்றச்சாட்டுகளை வீசுபவர்கள் யாரென்று பார்த்தால் அது தமிழ்நாட்டு மீம்ஸ் புலிகள் மட்டுமேஏனென்றால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்தபடியாக எந்த ஒரு விஷயத்தையும்  அதன் அடிப்படை என்னெவென்று கூடப் புரிந்து கொள்ளாமல் மணிக்கணக்கில் எதிர்த்துப் பேசிக்கொண்டேயிருக்கக் கூடிய திறமை இந்த மீம்ஸ் புலிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும்தான் உண்டு.

2004-05ம் ஆண்டுகளில் பி எஸ் என் எல்லின் நிகர லாபம் 10,183 கோடிகள்அதாவது அதுவரைக்கும் பி எஸ் என் எல் நிறுவனம் லாபம் ஈட்டும் நிறுவனமாகத்தான் இருந்து வந்தது.   2004 மே மாதம் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார்.  2009 தேர்தலுக்குப் பின்னும் அவரே பிரதமரானார்.  2009-10ல் முதல் முறையாக 1.823 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது.  2010-11ல்  நிகர நஷ்டம் 6,386 கோடிகளானது.  2011-12ல் நிகர நஷ்டம் 8,851 கோடிகள் ஆனது.  2012-13ல் நிகர நஷ்டம் 8,198 கோடிகள் ஆனதுஇந்த கால கட்டத்தில் மோடி பிரதமர் இல்லை என்பதை மீம்ஸ் புலிகள் மறந்து விட்டார்கள்.

 

அடுத்தது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் தொழிலாளர் ஊதியம் என்ற வகையில் அவர்கள் செலவிடுவது அதிகபட்சம் 7% மட்டுமே. ஆனால் அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லில் சம்பளமாக மட்டுமே 60% வரைக்கும் செலவாகிறது

 

நீங்களே யோசித்துப் பாருங்கள் –  நீங்களும் உங்கள் நண்பரும் விவசாயிகள்நீங்கள் 60 ரூபாய் கொடுத்து கூலிக்கு ஆளை வைத்து விவசாயம் செய்கையில் உங்கள் நண்பர் 7 ரூபாய் கூலி கொடுத்து ஆளை இறக்குகிறார்யாருக்கு லாபம் கிடைக்கும்?

 

இது சம்பளம் மட்டுமல்ல – உங்கள் நண்பர் 10 பேரை வைத்து அறுவடை செய்து விடுகிறார், ஆனால் நீங்கள் 100 பேரை வைத்து அறுவடை செய்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் நெல்லுக்கு நீங்கள் சொல்லும் விலை எவ்வளவு இருக்கும்? உங்கள் நண்பர் சொல்லும் விலை எவ்வளவு இருக்கும்? கட்டாயமாக உங்களை விட பல மடங்கு குறைவாகத்தான் உங்கள் நண்பரின் விலை இருக்கும், அப்படியும் அவருக்கு லாபம் கிடைக்கும்கடைசியில் உங்கள் நெல்லை நீங்களே அரிசியாக்கித் தின்ன வேண்டியதுதான். எவ்வளவு நாள்கூலி கொடுக்கக் கூட பணமில்லாமல் நீங்கள் விவசாயத்தை நிறுத்த வேண்டியதுதான். இல்லையென்றால்  வேறு வியாபாரம் அல்லது தொழில் செய்து அதிலே லாபம் வந்தால் அதனை இந்த நஷ்டத்தில் ஈடுகட்ட வேண்டியதுதான்கஷ்டப்பட்டு தொழில் செய்து லாபம் ஈட்டி அதனை இந்த நஷ்டத்திலே போட வேண்டுமென்றால் வீட்டிலே எல்லாரும் சும்மா இருப்பார்களா?

இதுதான் ஏர் இண்டியா விஷயத்திலும் நடந்ததுபோட்டியில்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை. தனியார் விமான கம்பெனிகள் வந்ததும் ஏர் இண்டியாவின் ஆதிக்கம் சரிந்தது. நான் மேலே சொன்ன விவசாயம் மாதிரிதான்சம்பளம் கூடுதல், ஊழியர்களும் அதிகம், அதனால் கட்டணங்களும் அதிகம். ஆனால் இதைவிட பாதி கட்டணத்தில் தனியார் விமானங்கள் சேவை அளிக்கையில் ஏர் இண்டியா படுத்து விட்டதுஎத்தனை வருடம்தான் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சகித்துக் கொள்வது?  

 

தனியார் துறைக்குத் திறந்து விடப்பட்ட எல்லா அரசு நிறுவனங்களின் நிலையும் இதுதான்மாற்றமேயில்லைதனியார் துறையில் வேலை செய்தாலும் செய்தாவிட்டாலும் வேலையும் நிரந்தரம், சம்பளமும் கூடிக் கொண்டே இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாதுவேலைத் திறன் குறைந்தால் கல்தா என்ற நிலையில் சோம்பித் திரிய முடியாது.

 

ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும், அவர்களது ஊதியமும் குறைய வேண்டும், அல்லது தனியார் துறையில் சம்பளம் அதிகரிக்க வேண்டும்நடக்கிற காரியமா?

 

சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம்தபால் துறை கூடத்தானே நஷ்டத்தில் இயங்குகிறது? அப்படி இருக்க அதனை மூடலாமேஇதுவும் இன்னொரு அதிமேதாவித்தனமான கேள்விதபால் துறையை இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் கோடிக்கணக்கான இந்தியர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள்தபால் துறையை இழுத்து மூடினால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள்அதே சமயத்தில் தபால் துறையின் சேவையை தனியாரால் கொடுக்க முடியாது

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly9lY29ub21pY3RpbWVzLmluZGlhdGltZXMuY29tL25ld3MvcG9saXRpY3MtYW5kLW5hdGlvbi9jaGFyZ2VzLWZyYW1lZC1hZ2FpbnN0LW1hcmFuLWJyb3RoZXJzLWluLXRlbGVwaG9uZS1leGNoYW5nZS1jYXNlL2FydGljbGVzaG93LzY3NzYyNzU2LmNtcyIsImltYWdlX2lkIjotMSwiaW1hZ2VfdXJsIjoiaHR0cHM6Ly9pbWcuZXRpbWcuY29tL3RodW1iL21zaWQtNjc3NjI3OTUsd2lkdGgtMTA3MCxoZWlnaHQtNTgwLGltZ3NpemUtMTM4NzQ4LG92ZXJsYXktZWNvbm9taWN0aW1lcy9waG90by5qcGciLCJ0aXRsZSI6IkNoYXJnZXMgZnJhbWVkIGFnYWluc3QgTWFyYW4gYnJvdGhlcnMgaW4gdGVsZXBob25lIGV4Y2hhbmdlIGNhc2UiLCJzdW1tYXJ5IjoiVGhlIGNoYXJnZXMgd2VyZSBmcmFtZWQgdW5kZXIgc2VjdGlvbnMgMTIwLUIgKGNyaW1pbmFsIGNvbnNwaXJhY3kpLCA0MDkgKGNyaW1pbmFsIGJyZWFjaCBvZiB0cnVzdCkgYW5kIDQyMCAoY2hlYXRpbmcpLCBhbmQgdGhlIFByZXZlbnRpb24gb2YgQ29ycnVwdGlvbiBBY3QuIiwidGVtcGxhdGUiOiJ1c2VfZGVmYXVsdF9mcm9tX3NldHRpbmdzIn0=”]

இப்போது இதை மனதில் கொண்டு பி எஸ் என் எல்லைப் பார்ப்போம்.

 

எத்தனை தனியார் கொரியர்  நிறுவனங்கள் வந்தாலும் தபால் துறையின் பங்கு குறையவில்லைகொரியர் நிறுவனங்களால் தபால் துறை அளவுக்கு சேவை அளிக்க முடியாது. அதே சமயம் தபால் துறையை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு அபாயகரமாகக் குறையவில்லைஎந்த அளவுக்கு என்று கேட்கிறீர்களா?

 

இன்றைக்கு பி எஸ் என் எல் லை உபயோகிப்பவர்களின் சதவீதம் என்ன தெரியுமா? பத்து சதவீதத்துக்குக் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்கொஞ்சம் நில்லுங்க.  2013-14லேயே அது 13% விட்டது, அதனால இதுவும் அம்பானிஅதானின்னு கூத்தடிக்காதீங்க டோலர்ஸ்.

 

இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன்பி எஸ் என் எல் லை மூடக்கூடாது என்று குதிக்கும் மூடர்கூடமே  நீங்கள் பி எஸ் என் எல் சிம் வைத்திருக்கிறீர்களாஇவிங்க மட்டும் பி எஸ் என் எல் லை உபயோகிக்க மாட்டார்களாம், ஆனால் பி எஸ் என் எல் நிறுவனம் மட்டும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வேண்டுமாம், அட மூடர் கூடமே அந்த நஷ்டத்தை அரசாங்கம்தான் ஈடு செய்ய வேண்டும், அந்த கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் என்பது நீயும் நானும் கட்டும் வரியில்தான் ஈடு செய்யப்படும்அது சரி, நேர்மையா வரி கட்டுறவனுக்குத்தானே கஷ்டம்…

முகேஷ் அம்பானி இலவசமாக் கொடுத்து எல்லாத்தையும் இழுத்து மூடிட்டார்சரிஇது ஒண்ணும் புதுசு இல்லே டுமீல்ஸ்சுமார் 50 வருஷத்துக்கு முன்னாடியே கும்பகோணம் திருவாரூர் ரூட்டுல தனியார் பஸ்ஸுல போட்டியை சமாளிக்க போட்டி போட்டிக்கிட்டு டிக்கெட் விலையைக் குறைச்சு எங்க பஸ்ஸில வந்தா ஃபில்டர் காபி இலவசம்னு எதிர் கம்பெனியை இழுத்து மூட வெச்ச கதையெல்லாம் தெரியுமா?

 

முன்னாள் நிதியமைச்சர் மற்றும் நிரந்தர நம்பர் 2 நாவலர் நெடுஞ்செழியன் ஒரு முறை வருத்தப்பட்டார் –  நாலஞ்சு பஸ்ஸு வெச்சிருக்கற முதலாளியெல்லாம் லட்சாதிபதியா இருக்கான், ஆனா ஆயிரக்கணக்குல பஸ்ஸு வெச்சிருக்க கவர்ன்மெண்டு மட்டும் நஷ்டத்துலயே ஓடுது?

 

யோசிச்சுப் பார்த்தா உண்மை புரியும்அரசு  நிறுவனங்கள் எதுவானாலும், தனியார் துறையில் அதே வேலையை செய்ய வைத்திருக்கும் ஆட்களை விடவும் பலமடங்கு அதிக ஊழியர்கள்தனியார் துறையை விடவும் பலமடங்கு அதிக சம்பளம். ஆனால் தனியார் துறை ஊழியர்களை விடவும் குறைந்த அளவு பணிஇதுக்கு மேலே என்னத்த சொல்ல?

2015 பெருவெள்ளத்தின் போது சென்னை மாநகரமே மின்சாரம் இன்றித் தவித்தாலும் தொடர்ந்து ஜெனரேட்டர்களை இயக்கி மொபைல் தொடர்பு குலையாமல் வைத்திருந்தது பி எஸ் என் எல் நிறுவனம்தான்தனியார் மொபைல் எல்லாம் காணாமல் போன பிறகும் சிக்னல் இருந்தது பி எஸ் என் எல் மட்டும்தான்பி எஸ் என் எல்லின் தரைவழித் தொலைபேசி சேவைகள் மட்டுமே அந்த வெள்ள காலத்திலும் இயங்கிக் கொண்டிருந்ததுஇதையெல்லாம் நான் மறுக்கவில்லைஇதனை தனியார் நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

ஆனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் என்றால் அது மக்களின் வரிப்பணம்தானேஇன்னும் கொஞ்சம் யோசித்தால் இந்த ஆயிரக்கணக்கான கோடிகளில் பெரும்பங்கு ஊழியர்களின் சம்பளமாகத்தான் போகிறதுசில லட்சம் பேர் சம்பாதிக்க கோடிக்கணக்கானவர்களின் வரிப்பணம் வீணாகலாமா?  

திருவாரூருக்கு அருகில் கூத்தூர் என்று ஒரு ரயில் நிலையம் இருந்ததுஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் அதிகம்அதனால் ரயில்வே நிர்வாகம் அந்த ரயில் நிலையத்தை மூடலாம் என்று முடிவெடுத்தது. உடனே ஊர்மக்கள் போராட்டம் ஆரம்பித்தனர்நிர்வாகம் பொதுமக்களை அழைத்துப்பேசியதுநீங்க யாரும் ரயிலிலே போக மாட்டீர்கள், ஆனால் ரயில் மட்டும் உங்கள் ஊரில் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாயாருமே ஏறாத போது, நாலைந்து பேருக்காக மட்டும் ஒரு நாளைக்கு நாலு ரயில் இந்த ஊரில் நிற்க வேண்டுமா? என்று கேட்டதும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இனிமேல் எல்லோரும் தினமும் ஒரு முறை ரயிலில் ஏறி திருவாரூர் அல்லது நாகப்பட்டினம் சென்று வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற்க ஆரம்பித்தது – 1992ல்இதனால் ரயில் நிலையத்தை மூடும் திட்டம் கைவிடப்பட்டது.

 

அப்படியே பி எஸ் என் எல் மூடப்படக்கூடாது என்று நினைத்தால் அது அரசின் கையில் இல்லை. உங்கள் கைகளில்தான் உள்ளதுபுரியவில்லையாஇன்றைக்கு எல்லா மொபைலிலும் இரண்டு சிம் வசதி இருக்கிறதுஒன்று உங்களுக்குப் பிடித்த தனியார் சிம்மாக இருக்கட்டும். இன்னொன்று பி எஸ் என் எல் ஆக இருக்கட்டும்அவுட்கோயிங் கால் எல்லாம் தனியார் சிம்மில் செய்யுங்கள்இன்கமிங் கால் என்பது பி எஸ் என் எல் எண்ணில் மட்டுமே என்று எல்லோருக்கும் கூறுங்கள்ஆபத்து காலத்தில் உதவுமே என்று ஒரு தரைவழி தொலைபேசி இருப்பதிலேயே குறைந்த கட்டணத்தில் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டைத் தொடர்பு கொள்ள அதுதானே சிறந்த வழி! ஆனால் நான் மீம்ஸ் மட்டுமே போடுவேன், விவரங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்து மட்டுமே கூறுவேன் என்று புரளும் டோலர்களுக்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும்.

 

ஒன்றே ஒன்று கேட்கிறேன் –  பி எஸ் என் எல் தொலைபேசி சேவையில் உங்களுக்கு முழு த்ருப்தி உள்ளதாஊழியர்களால் உங்களுக்கு பிரச்சினையில்லாமல் இருக்கிறதாஏதேனும் தடங்கல் என்றால் பிரச்சினை உடனே சரி செய்யப்படுகிறதாவாடிக்கையாளர் சேவை நன்றாக இயங்குகிறதா? இதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்ல முடிந்தால் ஸேவ்பிஎஸ்என்எல் என்று ஆரம்பியுங்கள், நானும் சேர்ந்து கொள்கிறேன்இல்லையென்றால்—- மூடிட்டுப் போங்க.

 

ஸ்ரீஅருண்குமார்

2 Replies to “ட்ரிங் ட்ரிங்க் – கடைசி மணியா?”

 1. அருமை பிஎஸ்என்எல் சேவைகள் மிகவும் மோசமாக தான் உள்ளது என் அக்கௌண்டில் validity முடிந்த பின்னும் ₹110 ரீசார்ஜ் பண்ணி இப்ப ₹300 இருக்கு ஆனால் outgoing services நிறுத்தப்பட்டுள்ளது.ஏன் என்று கேக்க கஸ்டமர் கேர் உக்கு போன் பண்ணா யாருமே எடுக்கல

 2. Too simplistic. Instead of blaming the previous govt, pls tell what did this govt did to revive.

  4G auction and services came during this govt only. Why did BSNL not invest for 4G services?

  Today most ppl use phone for 4G services and not for voice services. Do ppl in govt not know this?

  Instead of rationalising the staff strength, the govt is killing the entire company. What stopped the govt from giving staff VRS before 5 years itself, instead of doing so now?

  What steps did the govt take to improve the services of BSNL?

  Is this govt so incompetent for 5 years? In 2014, this govt came to power giving hope of ‘Achche Din’.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.