
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று ஒரு பெண் தன்னிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாக பகீர் தகவலை ஒரு பெண் நிருபரின் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாகி உள்ளது.
கவிஞர் வைரமுத்து திரை உலகில் வாய்ப்பு தேடும் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் #MeToo ஹாஷ் டேக் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்லி வரும் நிலையில் இந்த தகவல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
திமுக கருத்து கூறுமா..
கவிஞர் வைரமுத்து திமுகாவின் தீவிர ஆதரவாளர் , மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய தோழருமாவார். இவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து திமுக கட்சியும் பெண்ணிய போராளி கவிஞர் கனிமொழியும் கருத்து கூறுவார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.
நின்று கொல்லும் ஆண்டாள்..
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வைரமுத்துவின் மீதான பாலியல் புகார்களை பற்றி ஆண்டாள் தாயின் பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.