
கவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர்.
இதழில் கதையெழுதும் நேரமிது..
திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த ஒரு இளம் பெண்ணை தன்னுடைய பெசன்ட் நகர் வீட்டுக்கு வரவழைத்த வைரமுத்து அவருக்கு குடிக்க மோர் தந்து உபசரித்துள்ளார்.
பின்னர் அவர் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்து பெண்ணே உன் இதழில் மோர்த்துளி மீதமிருக்கிறது அதை நான் துடைத்து விடுகிறேன் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதாகவும் , ஆனால் சுதாரித்துக்கொண்ட அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி வந்ததாகவும் பாடகி சின்மயிக்கு வாட்ஸாப் செயலி மூலம் தகவலை பகிர்ந்ததாக தெரிகிறது.
தயாரிப்பாளருக்கு விருந்து படைத்த வள்ளல் ..
சந்தியா மேனன் என்ற ஒரு பத்திரிகையாளர் தனக்கு ஒருவர் அனுப்பியதாக மேலும் ஒரு பேதை பெண்ணின் கதையை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.
சென்னை சபாக்களில் தொடர்ந்து பாடி வரும் நல்ல உயர் படிப்பு படித்த இளம் பெண் ஒருவர் வாய்ப்பு கேட்டு வைரமுத்துவை சந்திக்க ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு வந்ததால் அங்கு சென்றுள்ளார். ஹோட்டல் அறையில் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் வைரமுத்துவுடன் இருந்ததாகவும் , தங்களுடன் அன்றைய இரவை கழித்தால் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை தருவதாகவும் வைரமுத்து கூறினாராம் .
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து அழுதபடியே ஓடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சீறி எழுந்த சின்மயி ..
வைரமுத்துவைப் போன்ற அரசியல் பலம் மிக்க ஒருவரின் முகத்திரையை கிழிப்பது தன் திரைப்பட பாடல் பாடும் தொழிலை பாதிக்கும் என்று அறிந்தும் துணிச்சலுடன் தொடர்ந்து போராடும் சின்மயிக்கு இணையத்தில் ஆதரவு பெருகி வருகிறது , ஆனாலும் தம்மை விற்றுப் பிழைக்கும் தமிழ் ஊடகங்கள் இது வரையில் ஒரு வரி கூட எழுதவில்லை.
ட்விட்டர் வலைத்தளத்தில் வைரமுத்துவுக்கு எதிராக #SexualPredatorVairamuthu #காமப்பேரரசுவைரமுத்து என்ற ஹாஷ் டேக் மூலம் பலரும் தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.