
சென்னை: 96 பட பிரச்சனைக்கும் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்க 96 படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது,
சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறார்கள்
96 பிரேம் குமார் எடுத்த படம். அது அந்த ஆளுக்கு மட்டுமே சொந்தமான படம். ஆனால் பார்க்கும் அத்தனை பேருக்கும் சொந்தமான படம் 96. ப்ளூ சட்டை மாறன் வந்து படத்தை ரொம்ப நல்லா சொல்லிட்டார் என்று இருக்கிறது. விஷால் நல்லவர், அவருக்கும் 96 பட பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை. விஷால் எவ்வளவு வட்டி கட்டுகிறார், எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது யாருக்கு தெரியும். விஷால் செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை விட்டுக் கொடுக்கும்போது அது குறித்து செய்தியாளர் சந்திப்பு வைத்தா சொல்ல முடியும். தற்போது கொடுத்த பணத்தையும் வேண்டாம் என்று விஷால் கூறிவிட்டார்.பெரியவர்கள் இந்த மேடையில் எல்லா பெரிய மனுஷங்களும் சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறார்கள். சின்னவர்கள் பெரியவர்கள் மாதிரி பேசுகிறார்கள். இந்த படம் ரிலீஸ் அன்று பிரச்சனை ஏற்பட்டது. அது சகஜம் தான். யாரும், யார் மீது குறை சொல்ல ஒன்றுமே இல்லை. இது யாரோ ஒருத்தர் யாரோ ஒருவரை டார்கெட் பண்ணுவது இல்லை.
96 ரிலீஸ்
படத்தை ரிலீஸ் செய்ய இரவு நந்தகோபால் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். என் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நான் அடுத்த கட்டத்திற்கு செல்லப் போகிறேன் என்று நம்புவேன். நீங்கள் பாராட்டும் போதையில் அடுத்து வருபவர்களும் இந்த போதைக்கு ஆசைப்பட்டு புதிதாக படங்களை சிந்திப்பார்கள், கொடுப்பார்கள். நல்ல படங்கள் வரும், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
சீமராஜா
நான் செஸ் விளையாடி இருக்கிறேன். ஆனால் 96 படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் நான் செஸ் போர்டில் ஒரு காயினாக இருந்தேன். சீமராஜாவுக்கு முன்பு சிவாவுக்கு நடந்தது என்ன என்று தெரியும். அதற்கு முன்பு விமலுக்கு நடந்தது தெரியும். எல்லோருக்கும் நடப்பது தான் எனக்கும் நடந்துள்ளது.
தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பணம் தான் பலம். அது தான் அவர்களின் அடையாளம். அவர்கள் அதை தக்க வைக்கத் தான் போராடுகிறார்கள். தீர்வு இல்லாத பிரச்சனையை வெளிப்படையாக பேசி என்ன பயன்?. யார் தீர்வு கொடுப்பார்கள்?. அதனால் தான் வெளியே சொல்ல முடியவில்லை. பிரச்சனை இருக்கு அதை வெளியே சொல்ல முடியவில்லை என்றார் விஜய் சேதுபதி.
அரசியலில் விஷாலுடன் கைகோர்க்கிறாரா விஜய் சேதுபதி என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .