பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர்.

சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. அதனை அகற்றி விட்டு பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக முஸ்லிம்கள் கோரிக்கை வைத்து பிரச்சினை செய்தனர். அந்த இடத்தில் Strongஆன தேர் நிறுத்தம் ஜெயா ஆட்சியில் கட்டப்பட்டு அப்பிரச்சினை ஓய்ந்தது. பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் தமுமுக, தவ்ஹீத் ஜமாத், Popular Friends of India, மனித நேய மக்கள் கட்சி என தீவிர இஸ்லாமிய அமைப்புகள் களத்தூரில் கால் ஊன்றி இந்துக்களை ஒடுக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

பிரச்சினைகள் தோன்றிய காலம் 1895லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது ஓர் கலவரம் ஏற்பட்டது. பின்னர் தேரடியை பஸ் ஸ்டாண்டு ஆக்க வேண்டும் என பிரச்சினையை முன் வைத்து 1951, பின்னர் 1990ல் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஜாதி ரீதியாக பிரிந்திருந்த இந்துக்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்ததில் ஊரில் பேசி தீர்த்துக் கொள்வோம் எனக் கூறி கேசை வாபஸ் பெற வைத்து நாடகமாடி பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வை ஏற்படுத்திக் கொண்டனர் இஸ்லாமியர்கள்.

இனப்பெருக்கம், வெளி ஊர்(நாடு) ஆட்களை குடியேற்றுதல் என தங்கள் ஜனத் தொகையை கூட்டிக் கொண்டனர் இஸ்லாமியர்கள். மைனாரிட்டி ஜாதிகள் ஊரை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் அவர்களுக்கு சாதகமாயிற்று.

வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் 3நாள் திருவிழா நடக்கும். முதல் நாள் செல்லியம்மன், ராயப்பனை(கிராம தேவதை) அழைத்தல், 2ம் நாள் மாரியம்மன் தேர். மூன்றாம் நாள் மஞ்சத் தண்ணி திருவிழா. ஜாதி பேதமில்லாமல் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து நடத்தும் விழா. மூன்று நாள் விழாவும் தேரோடும் வீதியில் ஆரம்பித்து பல தெருக்கள் வழியாக வரும். தேரோடும் வீதிக்கு அடுத்த தெருவில் மசூதி கட்ட (பின்னாட்களில் வரும் விளைவைப் பற்றி யோசிக்காமல்) இந்துக்கள் ஒப்புக் கொண்டனர். இதுதான் இன்றைய பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி. அவர்கள் சிறுபான்மையாக இருந்த வரை பிரச்சினை இல்லை. அவர்கள் எண்ணிக்கை கூட, கூட மேளம் அடிக்காதே, தேர் (தற்போது சகடை எனும் சிறிய வகைத் தேர்தான் ஓட்டப்படுகிறது) ஓட்டாதே என ஆரம்பித்து இன்று திருவிழாவே நடத்தக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
தேரோடும் வீதியிலும் இஸ்லாமியர்கள் வீடு வாங்கினார்கள். அதன் விளைவாக தேரோடும் வீதியில் இந்துக் கடவுள் வரக் கூடாது என அழிச்சாட்டியம் செய்து இந்த ஆண்டு திருவிழாவையே நிறுத்தும் அளவுக்குப் போய்விட்டார்கள்.

மூன்று நாள் திருவிழாவை 2015ம் ஆண்டில் இரண்டு நாளாக குறைத்துக் கொள்ளச் சொல்லி காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டது. காரணம் மமக, PFi போன்ற இயக்கங்களை முன்னிறுத்தி இஸ்லாமியர்கள் பிரச்சினை செய்தனர். அனுசரித்துப் போவோம் என இந்துக்களும் சரி என ஒப்புக் கொண்டனர். 2016ல் மொகரம் எனச் சொல்லி முஸ்லிம்கள் தடுக்க முற்பட்டனர். லேசாக விழித்த நம் தரப்பு முடியாது என கறாராக சொல்லியது. விட்டுக் கொடுங்கள் என மாவட்ட நிர்வாகம் கெஞ்சியதால் ஒப்புக் கொண்டனர். 2017லும் முஸ்லிம்கள் எதிர்ப்பு. பேச்சுவார்த்தை.இரண்டு நாள் உற்சவத்திற்கு இந்துக்கள் ஒப்புதல் என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மூன்று நாள் திருவிழாவை இரண்டு நாட்களாக்கியது இஸ்லாமியத் தரப்பு. அதன் நீழ்ச்சியாக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் நீங்கள் இரண்டு நாள் திருவிழாத்தானே கடந்த மூன்றாண்டுகளாக நடத்தினீர்கள். அது போல் இந்த ஆண்டும் இரண்டு நாள் மட்டுமே கொண்டாட வேண்டும் என அரசு நிர்வாகம் வற்புறுத்தியது. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என இந்துக்கள் தரப்பு உறுதியாக சொல்லிவிட்டது.

ஆனால் இஸ்லாமிய தரப்போ நீ திருவிழாவே நடத்தக் கூடாது. அப்படி நடதினால் தேர் ஓடும் வீதியில் தேர் வரக்கூடாது. வந்தால் தடுப்போம் என பிரச்சினையில் இறங்கினர்.

இதனைக் கண்டித்து இந்துமுன்னணி சார்பில் சென்ற வாரம் பெரம்பலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான களத்தூர் வாசிகள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி போராட்டத்தால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பையும் அழைத்தது. ஆனால் முஸ்லிம்கள் பிடிவாதமாக திருவிழா நடத்த விடமாட்டோம் என அங்கேயே சொல்லிற்று. காவல்துறையும், அரசு நிர்வாகமும். தேரோடும் வீதிக்குப் பதில் மாற்றுப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்தியது அரசு நிர்வாகம்.
ஆம்பூர் முதல் புழல் ஜெயில் வரை தன் பராக்கிறமத்தை நிலைநாட்டியவர்கள்தானே காவல்துறை.

ஒப்புக் கொள்ள மறுத்து நீதிமன்றத்தை நாடியது இந்துக்கள் தரப்பு. செப்டம்பர் 28ந் தேதி முதல் 30ந் தேதிவரை மூன்று நாள் திருவிழா கொண்டாட நீதிமன்றம் அனுமதி அளித்து தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட SPக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை புறம் தள்ளி 28.09.2018 இரவு முதல் 144தடை உத்தரவு பிறப்பித்து தன் வீரத்தை பறைசாற்றியது ஆம்பூர் போலீஸ்.

வரும் திங்களன்று (01.10.18) மீண்டும் நீதிமன்றத்தை நாட இருக்கின்றனர் ஊர் மக்கள்.

ஊர் கூட்டம் போட்டு இனி முஸ்லீம்கள் கடையில் பொருட்கள் வாங்குவதில்லை என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இரண்டே இரண்டு இந்துக்கள் மட்டுமே V.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளனர். கழகங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் மூக்கப் பிள்ளை என்பவரும், பின்னர் சாந்தி என்பவரும் தான் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்தி அவர்களே பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளனர்.

ஊரில் சிதிலமடைந்த சிவன் கோவிலை( தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர்)வேறு இடத்தில் புதிய ஆலயமாக ஸ்தாபித்து கும்பாபிஷேகம் 2002ம் ஆண்டு நடை பெற்றது. அதில் வீரத்துறவி இராம. கோபாலன் கலந்து கொண்டார்.

1992ம் ஆண்டு பெரிய தேர் சரிசெய்யப்பட்டுவெள்ளோட்டமும் விடப்பட்டது. ஆனால் தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களால்ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டிய RDO அதை இன்று வரை செய்யவில்லை.

இதற்கு என்ன தான் தீர்வு?

1.தேரோடும் வீதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு அப்புறப் படுத்தப்பட வேண்டும்.

2.இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரச்சினை வராமல் இருக்க சுவர் எழுப்பலாம்.

தாயா பிள்ளையாக, மாமன் மச்சானாக வாழ்கிறோம் என சொல்பவர்கள் வி களத்தூர் முஸ்லீம்களிடம் தற்போது இதைச் சொல்லலாமே?

எனகேள்வியும் எழுப்பியுள்ளார்..?

-ஓமம்புலியூர் ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.