தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன.

ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் இந்துக்கள் – மேற்கத்திய ஊடகங்கள் காட்டாத பகுதி என்று டாக்டர் பிலிஸ் செஸ்டர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது

கட்டுரையின் சாராம்சம்:

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் முஸ்லிம்கள் குற்றச் செயல்கள், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், பாலியல் அடிமைகள் போன்றவற்றை வைத்து சட்டவிரோத தொழில் செய்து அப்பணத்தை ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கிறனர். இவ்வாறான தேசவிரோதச்செயலை தைரியமாக தட்டிக் கேட்கும் இந்துக்கள் வெகு சிலர் தான். அவர்களுள் ஒருவர்-தபன் கோஷ்.

அக்கட்டுரையில் இந்துக்கள் இந்தியாவில் கொல்லப்படுவது புதிதல்ல என்றும் கடந்த 800 வருடங்களாக நடந்து வரும் ஒரு செயல் தான் என்றும் கோஷ் கூறுகிறார். காபிர்களை கொல்வதும் அல்லது மதமாற்றுவதும் தான் அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்துக்களின் பண்டிகைகளை நடக்க விடாமல் தடுப்பதும், கலவரம் செய்வதும் காலம் காலமாக நடந்துவந்துள்ளது.

டாக்டர் பிலிஸ் செஸ்டர் எழுதிய கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:

 

ஜனநாயக ஜிகாத்:

நமது அண்டை நாடுகளில் மதரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை விரைந்து வழங்கும் சட்டத்தை எதிர்த்து அடிப்படைவாத இந்திய இஸ்லாமியர்கள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் செய்கிறார்கள். அந்தச் சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்பது அவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த மேலை நாட்டு ஊடகங்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அவர்களுக்கு இந்துக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொல்லப்பட்டால் அக்கரையே இல்லை,  ஏன்? எந்த இந்திய முஸ்லிமையும் பாதிக்காத இச்சட்டத்தினை முஸ்லிம்களுக்கு எதிரானதாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன!? சட்டவிரோதமாக ஊடுருவிய இந்த 2 கோடி பேர் தான் ஜனநாயக ஜிகாத்தின் அங்கத்தினர்!

குறிப்பிட்ட இடங்களில் இந்துக்களை எண்ணிக்கையில் குறைத்து அங்கு ஷரியா சட்டத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இது தான் ஜெய்ஷ் இ முகம்மது முதல் ஐஎஸ் வரை அனைத்து இந்து விரோத முஸ்லீம் தீவிரவாதிகளின் திட்டமாக உள்ளது.

 

இதை பற்றி நாம் ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் சொல்லியுள்ளோம்:

2010ல் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் ஒவ்வொரு மாதமும் 25 இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுவதாக கூறியது! 2010ல் 60 இந்து குடும்பங்கள் கராச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஜனவரி 6, 2010 சோனர்கான் கோவில் பங்களாதேஷ் இஸ்லாமிய மத வெறியர்களால் இடிக்கப்பட்டது! ஆப்கானிஸ்தானில் இந்துப் பெண்களை கட்டாயமாக பர்தா அணிந்து வெளிய வர சட்டம் பிறப்பிக்கப்பட்டது-பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7% இல் இருந்து 14% மாக உயர்ந்துள்ளது! முஸ்லிம்களை அழிக்க நினைப்பதாக இடதுசாரிகள் எப்பொழுதும் பழி போடும் ஆர்எஸ்எஸ் போன்ற பாசிச இயக்கங்கள் இருந்தபோதும் அவர்களால் இந்த மக்கள் தொகை வளர்ச்சி வளர்ச்சி அடைய முடிந்தது. இனி வருங்காலங்களில் அவர்கள் 40% வளர்ச்சி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

வாக்கு வங்கி அரசியலில் அடுத்தடுத்த வந்த அரசாங்கங்களால் கண்டுகொள்ளாமல் கம்பளத்தின் கீழ் மறைக்கப்பட்ட இந்த சட்டவிரோத குடியேற்றத்தின் கடுமையான பிரச்சினையிலிருந்து விடுபட மட்டுமே இந்தியா முயற்சிக்கிறது. மூன்று நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு நிலையான ஒரு வீட்டை மட்டுமே வழங்க இந்தியா விரும்புகிறது, இதனால் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கப்படும். இதற்கு மேற்கத்திய ஊடகங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்,? முதலாவதாக, இது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயமில்லை, இரண்டாவதாக, இந்த குடியுரிமை பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா எந்த தவறும் செய்யவில்லை. ஒருவேளை, இந்தியாவில் மோடி அரசுக்கு எதிராக ஒரு தவறான பிம்பத்தை நீண்ட காலமாக அமைத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டு நிதி தொடர்பான விதிமுறைகளை மோடி அரசு கடுமையாக்கியுள்ளது என்ற கோபத்தின் வெளிப்பாடாக இருக்குமோ?

 

by @itisfire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.