ட்ராஜெக்டரி என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? சரி. முதலில் ட்ராஜெக்டரி என்றால் என்ன என்பதை பார்ப்போம். பிறகு விஷயத்திற்கு வருவோம். ட்ராஜெக்டரி என்பது நமது நகர்வு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை ஆகும். உதாரணத்திற்கு நாம் திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். திருச்சி நமது ஆரம்பப் புள்ளி. சென்னை கடைசிப்புள்ளி. இவை இரண்டு புள்ளிகளுக்கிடையே எவ்வளவு கால அளவு இருத்தல் வேண்டும் என்று நிர்ணயம் செய்து செயல்படுத்துவதுதான் ட்ராஜெக்டரி ஆகும். அதே திருச்சி முதல் சென்னை விழுப்புரம் வழியாகவா அல்லது கும்பகோணம் வழியாகவா என்று நிர்ணயிப்பது ட்ராஜெக்டோரி பிளானிங் எனப்படும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்!
சந்திரயான் 2! .

பூமிதான் ஆரம்பப் புள்ளி. சந்திரன் சென்று சேர வேண்டிய கடைசிப்புள்ளி (பூமியில் எந்த இடத்திலிருந்து, சந்திரனின் எந்த இடம் என்ற துல்லியமாகத் தெரிந்து நிர்ணயிக்க வேண்டும்). இப்போது கால அளவையம், வழித்தடப் புள்ளிகளையும் நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்குப் பெயர்தான் ட்ராஜெக்டரி ஜெனெரேஷன். இதுதான் சந்திரயான் போன்ற திட்ட்ங்களின் மிக
முக்கிய அம்சம். கணக்கு செய்து அவற்றை செயல்படுத்துவது கடினமான ஒன்று. அவ்வாறு கணக்கீடு செய்த ட்ராஜெக்டரியை டிராக் செய்து செல்வது மிக மிகக் கடினமான சவால். இதற்கு உதவுவது கண்ட்ரோல் சிஸ்டம் என்னும் தொழில்நுட்பம். இவற்றையெல்லாம் வெற்றியுடன் செயல்படுத்த கம்யூனிகேஷன் அதி முக்கியம்.
நமது ட்ராஜெக்டரி கடைசி நிமிடத்தில் ட்ராக் ஆகாமல் போனதும், கம்யூனிகேஷன் கருவிகள் வேலை செய்யாமல் போனதுமே நமக்குத் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
சரி இதற்கென்ன இவ்வளவு பெரிய விளக்கம் இப்போது? நமது சொரியாரிஸ்ட் குரூப் அன்பார் ஒருவர் தான் ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு உளறுகிறார். அதாவது, மூன்றாம் இடத்தில் இருந்த சந்திரன் நான்காம் வீட்டிற்க்கு நகரும்போது …. அட உனக்கு அறிவியல் தெரியாது (அறிவும் கிடையாது என்பது வேறு விஷயம்) என்பது எங்களுக்குத் தெரியும்.

நமது சொரியாரிஸ்ட் குரூப் அன்பார் ஒருவர் தான் ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு உளறுகிறான்


நம் நாடு, ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி உள்ளதே அதுவும் புரியாது (நாட்டுப்பற்று இருந்தால்தானே?) என்றும் எங்களுக்குட் தெரியும். சரி ஜோதிடக் கலை என்னவென்ற அறிவாவது இருக்கிறதா? அதுவும் இல்லை. ஜோதிடம் என்பது மிகப்பெரிய அறிவியல். நீ சொன்ன மூன்றாம் வீடு, நான்காம் வீடு என்பது துல்லியமாக நம் பூமியஸ் சுற்றி உள்ள 360 டிகிரியை 30 டிகிரி வீதம் பிரித்து, அற்புதமாக அளவீடு செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர். நாலு விஷயத்தைப் படி, கற்றுக் கொள். தெரியாத விஷயத்தில் வாயை மூடிக்கொள்.

பக்தியுடன் இரு.
நல்லவற்றை நாடு.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.