
அழித்தல் என்பது எளிது கடினமாம்
ஆக்கல் எனும் ஆற்றல்
வள்ளுவன் இன்று இருந்திருந்தால், இப்படி தான் எழுதியிருப்பார்.
ஆம், கடந்த சில தினங்களாக இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில், பெரும் அளவில் வன்முறைகள் நடைப்பெற்றதை கண்டிருப்பீர்கள். அதை பார்த்ததால் ஏற்ப்பட்ட தாக்கத்தை விட, இங்கு தமிழகத்தில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் வெளிப்படுத்திய அறியாமையே என்னை இப்படி யோசிக்க வைத்தது.
இந்த CAA பற்றி பலரும் அலசி தெளிவுபடுத்திய பின் அதை பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டு தெளிந்து பின் போராட்டத்தை வன்முறையின்றி மேற்கொண்டிருந்தால் பொதுமக்களும் ஆதரித்திருப்பர்.
போரட்டத்திற்கு காரணம் சில சுயநலமிக்க கட்சிகளின் பொய் பிரச்சாரமே என்பது உண்மை எனினும், மக்கள் எதற்காக இதை நம்புகிறார்கள்?
அனைவரும் நம்பவில்லை என்பதே உன்மை எனினும், ஏன் ஒரு சில மக்கள் இதை நம்பி அவர்கள் பின் செல்லுகிறர்கள்?
நம்புகிறார்கள் என்பதை விட, அது உண்மையாக இருக்காதா என்ற ஆதங்கமே மேலோங்கி இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதை மோடி என்ற நபரை எதிர்ககும் ஆயுதமாகவே கையிலெடுத்து கொண்டுள்ளனர். ஏன் எதிர் கட்சிகளும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
இதே கருத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் இந்நாள் முதல்வர் மம்தா பாணர்ஜீ வரை பாராளுமன்றத்தில் வைத்த போது கை தட்டிய அதே கும்பல் இன்று இந்த கருத்து இந்தியாவின் கண்னை குத்துவதாக கூச்சலிடுகின்றனர். ஏன்?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ஐயன் வள்ளுவர் கூறியதற்கு எதிர்மறையாக தான் இவர்கள் செயல்படுகிறார்கள் தவிற, சொல்லிய கருத்தை அலசி ஆராய மறுக்கின்றனர்.
மோடி என்ற ஒற்றை மனிதன் மீது எதற்காக இத்தனை வெறுப்பு?
இவர்களுக்கு இங்கு ஒன்றை தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மக்கள் மோடி எனும் ஓர் மந்திரத்துக்கு கட்டுப்பட்டு, பாஜக என்ற கட்சியை அரியணையில் அமர்த்தி அவர்கள் எண்ணங்களை நடைமுறை படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
ஆம்.
இந்திய நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.அனைத்து கட்சிகளும் தங்கள் வாக்குறிதிகளை மக்கள் முன் வைத்தனர். ஜனநாயக முறையில், மக்களும் அவர்கள் விரும்பிய வாக்குறுதிகளை வைத்த கட்சியை முழுமனதுடன் தேர்ந்தெடுத்தனர். அமோக வெற்றியை அளித்து அவர்களை தங்கள் நாட்டை காக்கும் பிரதிநிதியாக அனுப்பினர்.
அவர்களும் ஆட்சியில் அமர்ந்ததும் மக்களுக்கு தாங்கள் அளித்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற துவங்கினர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியது குத்தமா?
இதை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, அந்த கட்சியையும், ஆட்சியையும் இகழ்வது என்ன ஓர் அபத்தம்?
ஓர் கட்சி, தான் மக்களுக்கு அளித்த வாக்குறிதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் தானே தவறு? நிறைவேற்றியதற்கு ஏன் கதறுகின்றனர் இவர்கள்?
காரணம் ஒன்றே.
இத்தனை நாட்கள் மோடியை ஓர் அரக்கனாக சித்தரித்த இவர்களது பொய்த்திரை “சும்மா கிழி” என கிழிந்து தொங்கும் காரணத்தினால் தான்.
மோடிக்கு நற்பெயர் ஏற்ப்பட கூடாதென்று தான் இத்தனை வன்முறைகளை கட்டவிழ்த்து உள்ளனர். சொன்னதை செய்த காரணத்தினாலேயே மோடியை மீண்டும் மக்கள் பதவியேற செய்தனர். அதை இவர்கள் மறவாமல் இருத்தல் நன்று.
சென்ற முறை ஆட்சிக்கு வந்த மோடி தாங்கள் சொல்லிய அனைத்தையும் செயலாற்றாவிடினும், அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தன்னலமற்ற செயல்களின் மூலமாக மக்கள் நம்பிக்கை வலுப்பெற்று முன்பை விட அதிக வாக்கு பெற்று அரியனை ஏறினார்.
அதனாலேயே எதிர் கட்சிகள் அவரது செயலுக்கு முட்டுகட்டையிட்டவாறே இருக்கின்றனர். அது மக்களுக்கு நல்லதே ஆயினும் மோடி வழியாக சென்றடைவதால் சிறுபிள்ளை போன்ற ஆத்திரம்.
இவர்கள் அச்சமூட்டுவது போன்று ஒருவேளை குடிமக்களின் குடியுரிமையை ரத்து செய்வது போன்ற ஓர் சட்டம் இயற்ற பெற்றால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதத்தின் போதே அது தோற்றிருக்கும்.
அப்படியே இவர்கள் கூறுவது போல் மோடி சர்வாதிகாரியாக இருந்திருந்தால் குடியரசு தலைவர் அதை கையொப்பமிட்டு அமலுக்கு கொண்டு வந்திருப்பாரா?
அதையும் மீறி சட்டம் வந்தாலும் நமது உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தருக்கும்.
இதைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், காதில் விழுவதைல்லாம் நம்பி ஏமாறாதீர்கள்.
சிந்தியுங்கள்.
இது வரை இந்தியா என்ற தேசம் சிறுபான்மை மக்களுக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் மீது தினந்தோறும் வன்முறைகள் கட்டவிழ்த்து விட படுகின்றதென்றும் புலம்பி கொண்டிருந்த அதே நயவஞ்சகர்கள் இன்று அதே சிறுபான்மை மக்களுக்கு இங்கே தான் அபயம் வேண்டுமென்பது விசித்திரமாக இல்லை?
இதில் இருந்தே அவர்கள் சுயநலம் தெரியவில்லையா?
எது எப்படியோ, நீங்கள் மீண்டும் ஏமாறாமல் சமூக வலைத்தளங்களில் வரும் விஷயங்களை அப்படியே நம்புவதை விடுத்து தேடி படிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை சிறக்கும்.
Video Courtesy : JayaPlus & Kathir News